Home நாடு குடியுரிமை பிரச்சனை: அரசு ஊழியர்களின் தெளிவான விளக்கம் இல்லாததால் சிக்கல்!

குடியுரிமை பிரச்சனை: அரசு ஊழியர்களின் தெளிவான விளக்கம் இல்லாததால் சிக்கல்!

822
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அண்மையில் லோயர்ஸ் பார் லிபர்டி (எல்எப்எல்) சார்பாக வழக்கறிஞர் சுரேந்திரன், குழந்தைகள் குடியுரிமை பெறுவதில் அரசாங்கத்தின் காலத் தாமதத்திற்கும், உள்துறை அமைச்சின் தவறான முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் பேசிய துணை உள்துறை அமைச்சர் அஜிஸ் ஜம்மான், குழந்தையின் தாயார் மலேசிய குடியுரிமையைக் கொண்டிருந்தால் மட்டுமே, எந்த ஒரு குழந்தைக்கும் குடியுரிமை வழங்கப்படும் எனக் கூறியதற்கு சுரேந்திரன் எதிர்ப்புத் தெரிவித்தார்.

இந்நிலையில், குடியுரிமை பிரச்சனை மற்றும் அடையாள ஆவணங்கள் இல்லாத பிரச்சனைகள் சம்பந்தமாக விரைவில் நம்பிக்கைக் கூட்டணி அரசு நல்லதொரு முடிவினை அறிவிக்கும் என பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி தெரிவித்தார். இது சம்பந்தமான அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, விரைவில் அதற்கு அங்கீகாரம் கிடைக்கப்படும் என நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

தற்போதுள்ள விதிமுறைகளை பற்றி அரசு ஊழியர்கள் தெளிவாக விளக்காததால், இப்பிரச்சனைகள் மேலும் சிக்கலை எதிர்நோக்கி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தியர்கள் மட்டுமில்லாமல், இதர இனத்தவரும் இந்த பிரச்சனையில் சிக்கி உள்ளதாகக் கூறிய அமைச்சர், இதற்கு வித்திட்ட பத்து காரணங்களை  பிரதமர் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மித்ரா கண்டறிந்துள்ளதாகவும், இந்த பிரச்சனைகளிலிருந்து மீள்வதற்கு கூடிய விரைவில் தீர்வுக்காணும் எனவும் குறிப்பிட்டார்.

அண்மையில், பெற்றோர்களில், யாரேனும் ஒருவர் மலேசிய குடியுரிமை பெற்றவர்களாக இருந்தால், தானாகவே அக்குழந்தையும் மலேசிய குடியுரிமைப் பெற தகுதியுடையதாகிறது என லோயர்ஸ் பார் லிபர்டி(எல்எப்எல்தெரிவித்திருந்தது

ஆயினும், உள்துறை அமைச்சின் தெளிவுரை, நம்பிக்கைக் கூட்டணி அரசு, கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுவதாகவும், நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிக்கு எதிராக அமைந்துள்ளது எனவும் சுரேந்திரன் சுட்டிக் காட்டினார்.  இந்த விவகாரத்தில் அசராங்கம் உடனேதனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் சுரேந்திரன் கேட்டுக் கொண்டார்.