Home Video உறியடி 2: அரசியல்வாதிகளுக்கு சூர்யா கொடுத்த நெத்தியடி!

உறியடி 2: அரசியல்வாதிகளுக்கு சூர்யா கொடுத்த நெத்தியடி!

880
0
SHARE
Ad

சென்னை: நடிகர் சூர்யா தயாரிப்பில் இரசிகர்களால் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் ‘உறியடி 2’. அரசியல் சார்ந்து இத்திரைப்படம் நகர்த்தப்பட்டிருப்பதால், தற்காலச் சூழலுக்கு ஏற்றவாறு படம் வெளியானதும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உறியடி பாகம் ஒன்றின் தொடர்ச்சியாக இந்த படம் அமையும் எனக் கூறப்படுகிறது.   

2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில், இப்படத்தை இயக்கி நடித்திருக்கிறார் விஜயகுமார். பிரவீன்குமார்இப்படத்திற்கான ஒளிப்பதிவுப் பணியை ஏற்றிருக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டது. அரசியலில், இளைஞர்களிள் பங்களிப்பு குறித்து இப்படம் வெகுவாக பேசும் எனக் கூறப்படுகிறது. எதார்த்த பின்னணியில் படம் மாறுபட்ட கோணத்தில் நகர்வதை படக் காட்சிகள் சித்தரிக்கின்றன. இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் 5-ஆம் தேதிவெளியாகும்என்றுஅதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளியை கீழ்காணும் இணைப்பில் காணலாம்: