Home இந்தியா டிடிவி தினகரனுக்கு ‘பரிசுப் பெட்டி’ சின்னம்!

டிடிவி தினகரனுக்கு ‘பரிசுப் பெட்டி’ சின்னம்!

1021
0
SHARE
Ad

சென்னை: வருகிற இந்திய மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அமமுக கட்சிக்கும் எந்தவொரு சின்னமும் உறுதிபடுத்தாத நிலையில் அவர்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், அமமுகவிற்குபரிசுப் பெட்டிசின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. மேலும், அக்கட்சி பதிவுச் செய்யப்படாதக் கட்சியானதால், அதற்கு பொதுச் சின்னங்கள் எதுவும் தர இயலாது என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முன்னதாக அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டகுக்கர்சின்னத்தை, தேர்தல் ஆணையம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். ஆயினும், ‘குக்கர்சின்னத்தை வழங்க இயலாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

அமமுக பதிவுச் செய்யப்படாத கட்சி என்றபடியால், அக்கட்சிக்கு பொதுவான சின்னத்தையும் வழங்க இயலாது என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இது குறித்து கருத்துரைத்த நீதிமன்றம், பொதுச் சின்னத்தின் கீழ் போட்டியிட வேண்டும் என்ற அமமுகவின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

#TamilSchoolmychoice

அதன்படி, நேற்று வியாழக்கிழமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் அமமுக கட்சிக்கு ‘பரிசு பெட்டி’ சின்னமாக அறிவிக்கப்பட்டது.