Home நாடு நஜிப்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் முக்கியத்துவம் செலுத்தக் கோரிக்கை!

நஜிப்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் முக்கியத்துவம் செலுத்தக் கோரிக்கை!

1117
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்டுள்ள எஸ்ஆர்சி இண்டர்நேஷ்னல் நிறுவனம் குறித்த வழக்கு விசாரணையில் முக்கியத்துவம் செலுத்துமாறு, தலைமை நீதிபதி, ரிட்சார்ட் மாலாஞ்சுமுக்கு கடிதம் ஒன்றினை அனுப்ப உள்ளதாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் ஒருவர் கூறியதாக மலேசியாகினி செய்தித் தளம் குறிப்பிட்டுள்ளது.

எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் சம்பந்தமான வழக்கு வருகிற புதன்கிழமை (ஏப்ரல் 3-ஆம் தேதி) தொடங்கும் என நேற்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.  ஆகவே, அதற்கு முன்னதாகவேஇந்தக் கடிதம் அவரைச் சென்றடையவேண்டும் என அவர் கூறினார்.

அவர்களின் கோரிக்கைபடி, 1எம்டிபி குறித்த வழக்குகளை ஒத்தி வைத்து, எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் குறித்த வழக்கில் முக்கியத்துவம் செலுத்த, தலைமை நீதிபதி ஒப்புக் கொள்வார் என நம்புவதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, முன்னாள் பிரதமர் நஜிப் மீதான எஸ்ஆர்சி இண்டர்நேஷனலுக்குச் செந்தமான 42 மில்லியன் ரிங்கிட் பண மோசடி வழக்கு விசாரணை வருகிற ஏப்ரல் 3-ஆம் தேதி தொடங்குவதற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.