Home கலை உலகம் ‘பொன்னியின் செல்வன்’ பாத்திரங்கள் வெளியிடப்பட்டன!

‘பொன்னியின் செல்வன்’ பாத்திரங்கள் வெளியிடப்பட்டன!

1834
0
SHARE
Ad

சென்னைசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்திற்குப் பின்னர் இயக்குனர் மணிரத்னத்தின் மாபெரும் படைப்பாக உருவாக உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.

கடந்த காலங்களில் இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வந்தபோதும், செலவினைக் கட்டுப்படுத்த இயலாத பட்சத்தில் இத்திரைப்படத்தினை எடுப்பதற்கு மணிரத்னம் முன்வரவில்லை. ஆயினும், தற்போது, லைகா போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனங்களின் பங்களிப்பு தமிழ் திரையுலகில் கால் பதித்துள்ளதால், இது போன்ற திரைப்படங்கள் எடுப்பதற்கு சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் இயக்குனர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவுத் திரைப்படமாக் அமைகிறது. பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் தற்போது அவர் இறங்கி ஓரளவிற்கு என்னென்ன கதாபாத்திரங்களில் எந்தெந்த நடிகர்கள் ஏற்க உள்ளார்கள் எனும் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

தற்போது, நடிகர் விக்ரம் (ஆதித்ய கரிகாலன்), ஜெயம் ரவி (அருள்மொழி வர்மன்), கார்த்தி (வல்லவராயன் வந்தியத்தேவன்), போலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் (சுந்தர சோழர்), ஐஸ்வர்யா ராய் (நந்தினி), கீர்த்தி சுரேஷ் (குந்தவை நாச்சியார்) ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், பெரிய பழுவேட்டரையராக பிரபல தெலுங்கு நடிகரான மோகன் பாபு நடிக்க உள்ளார்.