Home கலை உலகம் ரஜினி167-இல் காவல் அதிகாரியாக களம் இறங்கும் ரஜினி!

ரஜினி167-இல் காவல் அதிகாரியாக களம் இறங்கும் ரஜினி!

1347
0
SHARE
Ad

சென்னை: பேட்ட திரைப்படத்திற்குப் பிறகு, நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் கைக்கோர்த்துள்ளார் என்ற தகவல் அண்மையில் வெளியாகியது.

இன்னமும் பெயரிடப்படாத அந்த படத்தின் புகைப்பட பதிவு அண்மையில் தொடக்கப்பட்டது. இந்நிலையில், இத்திரைப்படத்தில் அவர் காவல் அதிகாரியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படும் ஒரு சில புகைப்படங்கள் சமூகப் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

இத்திரைப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக, சந்திரமுகி, சிவாஜி மற்றும் குசேலன் ஆகிய படங்களில் ரஜினியுடன் இணைந்து இவர் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைப்பதாக முதல் கட்டத் தகவல்கள் கூறுகின்றன.