Home நாடு “அன்வாரைக் காட்டிலும், நஜிப் மோசமானவர்”- பிரதமர்

“அன்வாரைக் காட்டிலும், நஜிப் மோசமானவர்”- பிரதமர்

1447
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை விட அன்வார் இப்ராகிம் ஏற்கத்தக்க தலைவர் என பிரதமர் மகாதீர் முகமட் நியூஸ் ஸ்ரேட்ஸ் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அன்வாருடனான உறவில் ஏற்பட்ட விரிசலையும், விமர்சனங்களையும் ஒப்புக் கொண்ட மகாதீர், தற்போது, அவருடன் பணிப்புரிவது, நல்லதொரு தெளிவை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறியுள்ளார்.    

ஆமாம், முன்பு நான் கூறியிருந்தேன். ஆனால், தற்போது, நஜிப் இன்னும் மோசமானவராக இருக்கிறார்” என அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

தொடக்கக் காலத்தில் பக்காத்தான் ராக்யாட் கூட்டணியை முன்னிருந்து அன்வார் வழிநடத்தியதை குறிப்பிட்டுக் கூறிய மகாதீர், அன்வாரின் திறமையை, அதனை வைத்து, தாம் கணக்கிட்டதாகக் கூறினார்.

அம்னோவை விட்டு வெளியேறி, வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்டிருக்கும் கட்சிகளான ஜசெக, பாஸ் ஆகிய கட்சிகளை ஒன்றிணைத்து தேசிய முன்னணிக்கு எதிராக அவர் செயல்பட்டதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.

தாம் பிரதமர் பதவியிலிருந்து விலகியதும், நம்பிக்கைக் கூட்டணி உடைந்து விடும், என்ற கருத்திற்கு கருத்துரைத்த பிரதமர், தாம் நடப்பு துணைப் பிரதமர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகவும், அவர் அமைச்சரவையை நல்ல முறையில் வழிநடத்துவார் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.