Home நாடு “அளவுக்கு அதிகமான சுதந்திரம் நாட்டின் அமைதியைக் கெடுத்து விடும்!”- முகமட் ஹசான்

“அளவுக்கு அதிகமான சுதந்திரம் நாட்டின் அமைதியைக் கெடுத்து விடும்!”- முகமட் ஹசான்

805
0
SHARE
Ad

ரந்தாவ்: நம்பிக்கைக் கூட்டணி அரசு ஆட்சியைக் கைப்பற்றியப் பிறகே நாட்டில் இனப் பிரச்சனைகள் அதிகமாக எழுந்துள்ளன என முகமட் ஹசான் கூறியுள்ளார். முந்தைய, அரசாங்கத்தின் கீழ் இவ்வாறான காட்டம் இல்லாதிருந்தது.

தற்போது, எல்லா விசயங்களிலும், நடப்பு அரசு ஒரு வித அலட்சியத்தை பிரதிபலிப்பதால், மக்கள் மத்தியில் பயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தங்களின் நலனில் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தினை அவர்களிடத்தில் அரசு ஏற்படுத்தி விட்டது என ஹசான் குறிப்பிட்டார்.

“அளவுக்கு அதிகமான சுதந்திரம் நாட்டின் அமைதியைக் கெடுத்து விடும். இதனால் மக்கள் அமைதியின்றி காணப்படுகின்றனர்”  என அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“கடந்த 14-வது பொதுத் தேர்தலுக்கு முன்பு, நம்பிக்கைக் கூட்டணி நாட்டை நல்ல முறையில் வழிநடத்திச் செல்லும் என மக்கள் பெரும் நம்பிக்கை வைத்திருந்தனர். அப்போது, நம்பிக்கைக் கூட்டணி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அப்படி. இப்போது அவற்றை சரிவர பூர்த்தி செய்ய இயலாமல் போனதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்” என அவர் சுட்டிக் காட்டினார்.

“நாட்டில் தற்போது இருந்து வரும் இனப் பதற்றத்தை, அரசாங்கம் உடனே தீர்த்தாக வேண்டும். இல்லையேல், பல்வேறு சமூகங்களைக் கொண்ட இந்நாட்டிற்கு அது பாதகமாக அமைந்துவிடும்” என அவர் தெரிவித்தார்.

தேசிய முன்னணி ஆட்சியில் இனப் பிரச்சனைகள் அவ்வளவாக இல்லை என்றும், இருந்தபோதிலும், அவை பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் இல்லை எனவும் முகமட் குறிப்பிட்டுக் கூறினார்.