Home நாடு தற்காப்பு அமைச்சரின் மகன் விரைவில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்!

தற்காப்பு அமைச்சரின் மகன் விரைவில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்!

748
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அண்மையில் போதைப் பொருள் உட்கொண்டக் காரணத்திற்காக கைது செய்யப்பட்ட தற்காப்பு அமைச்சர் முகமட் சாபுவின் மகன் மீது ஏன் இன்னும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என லெங்கொங் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாம்சுல் அனுவார் நாசாரா அமைச்சரவையில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின், கூடிய விரைவில் அவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார் எனத் தெரிவித்தார்.   

அந்த ஆடவன் சம்பந்தமான வழக்கு விசாரணை அறிக்கையை, காவல் துறையினர்  அரசாங்கத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டதாக மொகிதின் கூறினார்.

#TamilSchoolmychoice

கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும், சம்பந்தப்பட்ட ஆடவர் மீது எம்மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது என ஷாம்சுல் வினவினார்.

சட்டவிரோதமாக மருந்துகளை எடுத்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு நபரின் சிறுநீரைப் பெறுவதற்காக காவல் துறையினர் குறிப்பிட ஒரு சில நிலையான இயக்க நடைமுறைக்கு உட்பட்டு செயல்பட வேண்டி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 5-ஆம் தேதி, தற்காப்பு அமைச்சரின் மகன், போதை பொருள் உட்கொண்டதற்காக ஜாலான் அம்பாங்கில் கைது செய்யப்பட்டார்.