Home உலகம் டிரம்பின் உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் பதவி விலகினார்!

டிரம்பின் உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் பதவி விலகினார்!

747
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டிரம்ப் நிருவாகத்தின் மிகவும் சர்ச்சைக்குரிய கொள்கைகளின் பொது முகமாக இருந்த உள்நாட்டு பாதுகாப்பு செயலாளரான கிர்ஸ்டென் நீல்சன் பதவி விலகியுள்ளார். அவர் பதவி விலகுவதாக டிரம்ப் தமது டுவிட்டர் பக்கத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலர் கிர்ஸ்டென் நீல்சென் தனது பதவியை விட்டு விலகுவார், அவருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்என தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவின் தற்போதைய சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு ஆணையரான கேவின் மெக்அலினன், இடைக்கால உள்நாட்டு பாதுகாப்புச் செயலாளராக பதவி வகிப்பார்” என அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நீல்சனின் பலவீனமான செயல்திறன் மீது புகார் தெரிவித்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கடந்த மே மாதம், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை குறைக்க தவறியதற்காக, அனைத்து அமைச்சர்கள் முன்னிலையிலும், நீல்சனை டிரம்ப் அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.