Home Photo News பூஜையுடன் தொடங்கிய தர்பார் படப்பிடிப்பு!

பூஜையுடன் தொடங்கிய தர்பார் படப்பிடிப்பு!

1425
0
SHARE
Ad

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் இன்று புதன்கிழமை பூஜையுடன் தொடங்கியுள்ளது.

நேற்று செவ்வாய்கிழமை இத்திரைப்படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்ட பிறகு இன்று படத்தின் பூஜையோடு படப்பிடிப்பும் தொடங்கி உள்ளது.

இந்த பூஜை நிகழ்ச்சியில், ரஜினிகாந்த், .ஆர். முருகதாஸ், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அல்லிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

இப்படத்தில், ரஜினியின் மனைவியாக நயன்தாரா நடிக்கிறார் என்றும், இவர்களின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தர்பார் படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன: