Home இந்தியா இந்தியா தேர்தல்: 20 மாநிலங்களில் ஏப்ரல் 11-இல் முதல்கட்ட வாக்குப்பதிவு!

இந்தியா தேர்தல்: 20 மாநிலங்களில் ஏப்ரல் 11-இல் முதல்கட்ட வாக்குப்பதிவு!

719
0
SHARE
Ad

புது டில்லி: உலகிலேயே பெரிய ஜனநாயகநாடான இந்தியாவின் 17-வது மக்களைவைத் தேர்தல் நாளை வியாழக்கிழமை தொடங்க உள்ளது. 20 மாநிலங்களில் 91 மக்களவைத் தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை காலை தொடங்க உள்ளது. 

இந்தத் தேர்தலானது வருகிற மே 19-ஆம் தேதி வரையிலும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.

மக்களவைத் தேர்தலுடன், ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நாளை சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. மேலும், ஒடிசாவில் நாளை முதல்கட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது

#TamilSchoolmychoice

ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், அஸ்சாம், பிகார், சத்தீஷ்கார், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிசா, சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்கம், அந்தமான் ஆகிய மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது