நெதர்லாந்து: கருந்துளை என்றால் இப்படிதான் இருக்கும் என இண்டெர்ஸ்தெல்லர் திரைப்படத்தினைப் பார்த்து நாம் வியந்திருப்போம். கற்பனையில் இவ்வாறாக இருந்திருக்கலாம் என ஊகித்து பல்வேறு படங்கள் கருந்துளையைப் பற்றி வெளியிடப்பட்டிருந்தன. இனி அதற்கான தேவையை உடைத்தெரித்துள்ளனர் அறிவியலாளர்கள்.
நாம் வாழும் சூரியக் குடும்பம் உட்பட ஒட்டுமொத்த அண்டத்தையும் தனது ஈர்ப்பு சக்தியால் விழுங்கிவிடும் வல்லமை பெற்றது இந்த கருந்துளை.
இந்நிலையில் முதல் முறையாக கருந்துளையைப் புகைப்படம் எடுத்து, அதனை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். இந்தப் புகைப்படத்தில் கருப்பு நிற மையப்பகுதி, ஆரஞ்சு நிற வளையம் போன்ற பகுதி, அதில் வெள்ளை நிற வெப்பமான வாயு ஆகியவை இடம் பெற்றுள்ளன.
M87 என்று குறிப்பிடப்பட்ட அந்த கருந்துளை அண்டத்திலிருந்து 54 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் காணப்படுகிறது. இதனை பல்வேறு ரேடியோ தொலை நோக்கிகள் உதவியுடன் படம்பிடித்துள்ளனர். இந்த கருந்துளை இருக்கும் தொலைவை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என்று பிரான்ஸ் நாட்டு வானியல் அறிஞர் பிரடெரிக் குத் தெரிவித்துள்ளார்