Home நாடு ஜோகூர்: ஒஸ்மான் சபியான் பதவி விலகியது ஏன்? சனிக்கிழமை அறிவிக்கப்படும்!

ஜோகூர்: ஒஸ்மான் சபியான் பதவி விலகியது ஏன்? சனிக்கிழமை அறிவிக்கப்படும்!

946
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: ஜோகூர் மந்திரி பெசார் பதவியிலிருந்து தாம் விலகியதற்கான காரணத்தை, வருகிற சனிக்கிழமையன்று ஒஸ்மான் சபியான் வெளிப்படுத்த உள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார். நேற்று புதன்கிழமை பெர்னாமாவிடம் பேசிய ஒஸ்மான், சுல்தான் ஜோகூரை சந்தித்ததற்குப் பிறகு தாம் இவ்விவகாரத்தை வெளிப்படுத்த உள்ளதாகக் கூறினார்.

புத்ராஜெயா மற்றும் ஜோகூர் அரண்மைக்கும் இடையிலான பதட்ட நிலையின் காரணமாக சில மாதங்களாகவே ஒஸ்மான் பதவி விலகலாம் எனக் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த திங்களன்று ஒஸ்மான் பதவி விலகி விட்டதாக பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.