Home நாடு நாடாளுமன்றத்திலிருந்து நஜிப் 3 மாதங்களுக்கு இடைநீக்கமா?

நாடாளுமன்றத்திலிருந்து நஜிப் 3 மாதங்களுக்கு இடைநீக்கமா?

791
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை மூன்று மாதங்களுக்கு இடைநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட இருப்பதாக ஸ்டார் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

பெல்டா ஆவணங்களுக்கு விதிக்கப்பட்டத் தடைகளை மீறி நஜிப் அந்த ஆவணக்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டதற்காக இந்த தீர்மாணம் இன்று கொண்டு வரப்படும் எனக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

நாடாளுமன்றத்தின் நிலைப்பாட்டு விதி 95ஏ விதியை நஜிப் மீறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் ஈகல் ஹை பிளாண்டேஷனடமிருந்து 37 விழுக்காடு பங்குகளை பெல்டா வாங்கியதைக் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் அவற்றை  நஜிப் வெளியிட்டதற்காக அவர் மீது இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நேற்று புதன்கிழமை பிரதமர், நஜிப் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் என்பதனை இது நஜிப்புற்கு நினைவுப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.