Home நாடு ஜோகூர்: மந்திரி பெசார் பதவிக்கு தகுதியானவர்களை பெர்சாத்து கண்டறிந்துள்ளது!

ஜோகூர்: மந்திரி பெசார் பதவிக்கு தகுதியானவர்களை பெர்சாத்து கண்டறிந்துள்ளது!

804
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜோகூர் மந்திரி பெசாராக நியமிக்க ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பெர்சாத்து கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார். அவர்களின் பெயர்கள் கூடிய விரைவில் ஜோகூர் சுல்தானிடம் ஒப்படைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

மாநில அம்னோ கட்சியினர் சட்டமன்றத்தைக் கலைக்க கோரிக்கை விடுக்க உள்ளதாகக் கூறப்பட்ட விவகாரத்திற்கு பதில் கூறிய மொகிதின், அம்னோ எதிர்கட்சியாக இருக்கிறது எனவும், அது அவ்வாறு செய்ய இயலாது எனவும் குறிப்பிட்டார். சட்டமன்றத்தைக் கலைப்பதற்கு அரசாங்கத்திற்கே உரிமை உள்ளது என அவர் தெரிவித்தார்.

மீண்டும் அவர் ஜோகூர் மாநிலத்திற்கு மந்திரி பெசாராகும் வாய்ப்புகள் உள்ளனவா எனும் கேள்விக்கு பதிலளித்த மொகிதின், தமக்கு வயதாகி விட்டதென்றும், புதியவர்களுக்கு அப்பதவி சேர்வதே சிறந்த முடிவாக இருக்கும் எனவும் கூறினார். ஆயினும், மாநில ஆட்சிக் குழுவுடன் இணைந்து செயல்பட தாம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.