Home நாடு வேதமூர்த்தியின் சித்திரை – விஷு – வைசாக்கி புத்தாண்டு நல்வாழ்த்துகள்

வேதமூர்த்தியின் சித்திரை – விஷு – வைசாக்கி புத்தாண்டு நல்வாழ்த்துகள்

1246
0
SHARE
Ad

புத்ராஜெயா: மலேசியவாழ் இந்துப் பெருமக்கள் அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு சித்திரைப் புத்தாண்டு கொண்டாடப்படும் அதே காலக்கட்டத்தில் வைசாக்கி தினம் என்னும் சீக்கியப் புத்தாண்டும் மலையாள மக்களின் விஷுப் புத்தாண்டும் அடுத்தடுத்து கொண்டாடப்படும் வேளையில், அந்தப் புத்தாண்டுகளைக் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன். வேதமூர்த்தி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.