Home வணிகம்/தொழில் நுட்பம் இந்தியா: 6 மில்லியன் டிக்டாக் பதிவுகள் நீக்கம்!

இந்தியா: 6 மில்லியன் டிக்டாக் பதிவுகள் நீக்கம்!

981
0
SHARE
Ad

புது டில்லி: சமீபக்காலமாக டிக்டாக் செயலியின் மூலமாக பாதுகாப்பற்ற நிலையில் இந்திய இளைஞர்கள் பல்வேறு வகையிலான காணொளிகளை பதிவுச் செய்து வருவதைக் கண்டித்து அந்தச் செயலியைத் தடைச் செய்ய முடிவு செய்திருந்தது.

ஆயினும், தற்போதைக்கு ஒரு சில பாதுகாப்பு அம்சங்களுடன் அச்செயலி மீண்டும் செயலில் இருந்து வருகிறது. டிக்டாக் பாதுகாப்பு மையம் (TikTok’s Safety Centre) தமிழ், இந்தி, குஜராத்தி, மராத்தி, வங்காளம், பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய பத்து மொழிகளில் காணொளிகளை மதிப்பிடும் பணியைச் செய்துவருகிறது.

இந்நிலையில், டிக்டாக் நிறுவனம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், 6 மில்லியன் காணொளிகள் விதிமீறல் காரணமாக நீக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. டிக்டாக் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய கடந்த ஜூலை மாதம் முதல் இந்நடிவடிக்கையை எடுத்துவருவதாக அந்நிறுவனம் கூறியது.

#TamilSchoolmychoice

மேலும், இனி டிக்டாக்கில் புதியக் கணக்குகளைத் தொடங்குபவரின் வயது 13-ஆக இருப்பதை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.