Home நாடு சுஹாகாம் தலைவர் பதவி விலகல்!

சுஹாகாம் தலைவர் பதவி விலகல்!

827
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பதவிக் காலம் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில், மனித உரிமைகள் ஆணையத்தின் (சுஹாகாம்) தலைவர் டான்ஶ்ரீ ரசாலி இஸ்மாயில் பதவி விலகி உள்ளார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு இப்பதவியில் நியமிக்கப்பட்டவர், வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி தலைவர் பதவியிலிருந்து விலகியிருக்க இருக்க வேண்டும்.

இந்த விவகாரம் குறித்து மாமன்னர் மற்றும் பிரதமருக்கு கடிதம் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டு விட்டது எனவும், சுஹாகாம் ஆணையத்திற்கும் அறிவிக்கப்பட்டுவிட்டது என்றார்.

#TamilSchoolmychoice

நான் மூன்று வருடங்களாக சுஹாகாமில் இருக்கிறேன். நல்ல முறையில் நான் செயல்பட்டேன் என்று நம்புகிறேன்” என அவர் கூறினார்.

சுஹாகாம் புதிய தலைவரைத் தேர்தெடுப்பதற்கு வழிவகுக்கும் வகையில், பதவிக் காலம் முடிவடைவதற்குள் தாம் பதவி விலகுவதாகக் கூறினார்.