Home இந்தியா வேலூரில் தேர்தல் நிறுத்தி வைக்கப்படலாம், குடியரசு தலைவர் முடிவு!

வேலூரில் தேர்தல் நிறுத்தி வைக்கப்படலாம், குடியரசு தலைவர் முடிவு!

821
0
SHARE
Ad

சென்னை: இன்று செவ்வாய்க்கிழமை இந்திய நேரம்படி மாலை 6 மணிக்கு தேர்தல் பிரச்சாரங்கள் நிறுத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆகவே, தலைவர்கள் இறுதி நேர பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு திமுக வேட்பாளரின் அலுவலகத்தில் அதிகளவு பணம் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து, வேலூரில் தேர்தல் நடத்தப்படுவது என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இந்த விவகாரம் குறித்து குடியரசு தலைவர்தான் இறுதி முடிவு எடுப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பாக பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியில் களம் இறங்கினார். துரை முருகனின் வீட்டில் கடந்த மார்ச் 30-ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

#TamilSchoolmychoice

அச்சோதனையில், 10.5 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றறப்பட்டது. அடுத்த இரண்டு நாட்களுக்கு பின்னர், மீண்டும் 11.53 கோடி ரூபாய் பணம் வேலூரில் உள்ள துரை முருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

இவ்வேளையில், வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்களை அளித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கதிர் ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி, தேர்தல் ஆணையம், குடியரசு தலைவருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.