Home நாடு முகமட் அஷ்ராப்: அதிநவீன தொழில்நுட்பங்கள் தோற்றுப்போயின, கிராமவாசிகள் தேடும் பணியில் இறங்கினர்!

முகமட் அஷ்ராப்: அதிநவீன தொழில்நுட்பங்கள் தோற்றுப்போயின, கிராமவாசிகள் தேடும் பணியில் இறங்கினர்!

753
0
SHARE
Ad

ஈப்போ: கடந்த மார்ச் 23-ஆம் தேதி காணாமல்போன நெடுந்தூர ஓட்ட வீரர் முகமட் அஷ்ராப் ஹாசனை கண்டுபிடிக்கும் பொருட்டி தொடங்கப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை தொடங்கி காலவரையின்றி கைவிடப்படுவதாக பேராக் மாநில காவல் துறைத் தலைவர் டத்தோ முகமட் ராசாருடின் கூறினார்.

கம்போங் பிந்து பாடாங்கில் உள்ள கிராமவாசிகள் தங்களுக்கான சொந்த வழிகளைப் பயன்படுத்தி, அந்த 29 வயது நிரம்பிய ஓட்ட வீரரைத் தேட வழிவகுக்கும் வகையில், இந்த தேடும் பணி நிறுத்தப்படுவதாகக் கூறினார்.

நாங்கள் சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்களைக் கொண்டு முயற்சி செய்து விட்டோம்” என அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

முகமட் அஷ்ராப்பை, தங்களின் சொந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி தேட காவல்துறை அனுமதிக்க வேண்டுமென கிராமவாசிகள் கோரிக்கை விடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த மார்ச் 23-ஆம் தேதி, கோபேங் அல்ட்ரா டிரெயில் மராத்தோன் போட்டியில் பங்கேற்றபோது, முகமட் அஷ்ராப் காணாமல் போனார். அவர் காணாமல் போய் மூன்று வாரங்களுக்கு மேலாகியும், அவரது தற்போதைய நிலைக் குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்கப்படவில்லை.

இந்த தற்காலிக நிறுத்தமானது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமைதியையும், வதந்திகள் குறித்தும் அவர்கள் கவலைப்படாமல் இருப்பதற்கு உதவியாக இருக்கும் என ராசாருடின் கூறினார்.

அப்பகுதியில் மக்களின் நடமாட்டத்தை குறைத்துள்ள வேளையில், அது உள்ளூர் சமூகத்தின் உணர்வுகளை மதிக்கும் வகையில் இயக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.