சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் கட்சி ஆரம்பித்ததோடு, அவர் அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவாரா இல்லையா எனும் கேள்விகளும், கிண்டல்களும் மக்கள் மத்தியில் சமூகத் தளங்களில் பரவலாகப் பேசப்பட்டன.
கடந்த வியாழக்கிழமை நடந்த, தமிழகம், கர்நாடக உள்ளிட்ட 11 மாநிலங்களில் உள்ள 95 மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 67.84 விழுக்காடு வாக்குகள் பதிவானதாகவும், தமிழகத்தில் மட்டும் 71 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்தத் தேர்தல் வாக்குப்பதிவுக் குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியப் போது, தேர்தல் நல்லமுறையில் நடந்து முடிந்துள்ளதாகவும், வருகிற மே 23-ஆம் தேதி வெளியிடப்படும் முடிவுக்காக தாம் காத்திருப்பதாகக் கூறினார்.
அரசியலில் அவரது அடுத்தக் கட்ட நடவடிக்கைக் குறித்து வினவிய போது, “மக்களின் நம்பிக்கையை வீணடிக்க மாட்டேன். நிச்சயம் நான் சட்டப்பேரவைத் தேர்தலில் களம் இறங்குவேன்” எனத் தெர்திவித்தார்.