Home இந்தியா வங்கக்கடலின் நீர் மட்டம் உயருவதால் சென்னை முழ்கும் அபாயம்!

வங்கக்கடலின் நீர் மட்டம் உயருவதால் சென்னை முழ்கும் அபாயம்!

1134
0
SHARE
Ad

சென்னை: 2100-ஆம் ஆண்டில் சென்னை அடையார் முதல் திருவான்மியூர் வரை வங்கக்கடல் ஒரு மீட்டர் அளவுக்கு உயர்ந்து 35 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை ஆக்கிரமிக்கும் என ஐக்கிய அரபு பல்கலைக்கழகமும் அண்ணா பல்கலைக்கழகமும் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு ஆறு, முட்டுக்காடு ஆகிய இடங்கள் சோதனை இடப்பட்டன. இதன் மூலம் கடல்மட்டம் எவ்வளவு உயரத்துக்கு அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டது

கடந்த 50 ஆண்டுகளில் 3.6 மில்லி மீட்டர் அளவு வங்கக்கடல் உயர்ந்துள்ளது என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இந்த ஆய்வின்படி ஆண்டுக்கு இரண்டு மில்லி மீட்டர் என்ற அளவில் வங்கக்கடல் மட்டம் உயரும் எனத் தெரிய வந்துள்ளது.

#TamilSchoolmychoice

ஆயினும், இவ்வாறு நடப்பதற்கு இன்னும் நீண்டகாலம் இருப்பதாகவும், அதற்காக தற்போது பயப்படத் தேவை இல்லை எனவும் அது குறிப்பிட்டுள்ளது.