Home வணிகம்/தொழில் நுட்பம் ஏப்ரல் 22: உலக பூமி நாள், டூடுள் வெளியிட்ட கூகுள்!

ஏப்ரல் 22: உலக பூமி நாள், டூடுள் வெளியிட்ட கூகுள்!

1146
0
SHARE
Ad

கலிபோர்னியா: உலகம் முழுவதும் உள்ள ஒரு பில்லியனுக்கும் மேலான மக்கள், இன்று திங்கட்கிழமை பூமி நாளை கொண்டாடி வரும் வேளையில், சுற்றுசூழல், பூமியை பாதுகாக்கும் வகையில், கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டுள்ளது.

மனித இனத்தின் சுயநலப்போக்கினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புக் குறித்து அன்றாடம் செய்திகளும், எச்சரிக்கைகளும் வெளியிடப்பட்டு வந்தாலும், அதன் சீற்றத்தை இன்னமும் கட்டுப்படுத்த இயலாமல் இருக்கிறது.

ஆங்காங்கே, பெரிய அளவிலான காடுகளும், மலைகளும் அழிக்கப்பட்டு, அங்கு வாழும் உயிரினங்களுக்கு பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்துவதும், நெகிழி போன்ற பொருட்களினால் நில மற்றும் கடல் வாழ் உயிரினங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதும் மனிதர்களுக்கு, எந்தவித அச்சமும் குற்ற உணச்சியும் இல்லை.

#TamilSchoolmychoice

கடந்த 1970-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, ஒவ்வொரு வருடமும், ஏப்ரல் 22-ஆம் தேதி உலக பூமி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகமான வெப்பம், கடல் நீர் மட்ட உயர்வு, மற்றும் மோசமான வானிலைகள் இம்முறை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவை அனைத்தும், மனிதனின் முந்தைய தற்போதைய செயல்பாட்டினால் விளைந்தது என அறிவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.