இந்த சம்பவத்தில் நான்கு இந்தியர்கள் பலியானதாக இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும் உறுதி செய்துள்ளார்.
இதற்கிடையே, தமிழகத்தில் செயல்பட்டுவரும் தாவீத் ஜமாத் அமைப்பு இத்தாக்குதலுக்குக் காரணமாக இருக்குமோ என உளவுத்துறை சந்தேகிக்கிறதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆயினும், சிறிய பயங்கரவாத அமைப்பான தாவீத் ஜமாத் இதுபோன்ற தொடர் குண்டு வெடிப்பு நடத்துவது இயலாத காரியம் எனவும் கருதப்படுகிறது. இதுவரை இந்த குண்டு வெடிப்புக்கு எந்த பெரிய பயங்கரவாத அமைப்புகளும் பொறுப்பேற்காத நிலையில் இந்த குழப்பம் நீடித்து வருகிறது.