Home நாடு எஸ்ஆர்சி: பாடாங் செராய் அம்னோ தொகுதிக்கு 50,000 ரிங்கிட் பணம் கொடுக்கப்பட்டது!

எஸ்ஆர்சி: பாடாங் செராய் அம்னோ தொகுதிக்கு 50,000 ரிங்கிட் பணம் கொடுக்கப்பட்டது!

845
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி நிதி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான விசாரணை ஆறாவது நாளான இன்று திங்கட்கிழமை தொடரப்பட்டது.

முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய நிதி மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக மூன்று குற்றச்சாட்டுக்களை எதிர் நோக்கியுள்ளார்கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியான முகமட் நாஸ்லான் முகமட் கசாலியின் முன்னிலையில் நஜிப்பின் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

படாங் செராய் அம்னோ தொகுதி 50,000 ரிங்கிட் பணத்தை முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிடமிருந்து பெற்றதாகக் கூறியது. 50 வயது நிரம்பிய, டத்தோ அஸ்மாடி அபு தாலிப் அத்தொகையை நஜிப்பிடமிருந்து புத்ரா உலக வர்த்தக மையத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டதாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

பாடாங் செராய் தொகுதியில் பல்வேறு சமூக நலக் காரியங்களுக்காக பயன்படுத்துவதற்காக நஜிப் 50,000 ரிங்கிட் பணத்தைக் கொடுத்தார்” என அஸ்மாடி கூறினார். கணக்கு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என்ற பட்சத்தில் அப்பணமானது பாடாங் செராய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படாமல், தம்மிடம் காசோலையாகக் கொடுக்கப்பட்டது என அஸ்மாடி மேலும் கூறினார்.