Home இந்தியா இந்தியா தேர்தல்: வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் மோடி!

இந்தியா தேர்தல்: வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் மோடி!

1014
0
SHARE
Ad

உத்திர பிரதேசம்: வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் இன்று வெள்ளிக்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்திய நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த தேர்தலில் உத்தர பிரதேசம் மாநிலம், வாரணாசியில் போட்டியிடுகிறார்.

வேட்புமனு தாக்கலின் போது அதிமுக ஒருங்கிணைப்பாளார் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை, தமிழக அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மேலும் இதர கூட்டணிக் கட்சித் தலைவர்களும் மோடியுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து இந்த முறை போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரும் முக்கிய பிரபலமாக இல்லாதது, மோடிக்கு சாதகமாக அமையலாம் எனக் கூறப்படுகிறது. சுமார் ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடியை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.