Home நாடு ரோம் சாசனம்: “எல்லா பிரச்சனைகளுக்கும் என்னையே குற்றம் சொல்வார்கள்!”- டோமி

ரோம் சாசனம்: “எல்லா பிரச்சனைகளுக்கும் என்னையே குற்றம் சொல்வார்கள்!”- டோமி

817
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ரோம் சாசன விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைபாட்டை மலாய் ஆட்சியாளர்களிடம் தகுந்த முறையில் நிரூபிக்க தவறிவிட்டதாக அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் மீது கூறப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.

“பிரச்சனைகள் இருந்தாலும் என்னைதான் குற்றம் கூறுவார்கள், பிரச்சனை இல்லையென்றாலும் என்னைதான் குற்றம் கூறுவார்கள் “ என அவர் குறிப்பிடிருந்தார்.

அவர்களின் இந்தக் குற்றச்சாட்டில் உண்மையில்லை என டோமி கூறினார்.

#TamilSchoolmychoice

டோமியினால்தான் ரோம் சாசனத்தை நம்பிக்கைக் கூட்டணி அரசு அங்கீகரிக்க முடியவில்லை என்று வழக்கறிஞர் முகமட் கைரூல் அசாம் அசீஸ் கூறியிருந்தார்.

நாளை சனிக்கிழமை இது குறித்து பேசப்படும் என டோமி நிருபர்களிடம் தெரிவித்தார்.