Home கலை உலகம் கூர்காவாக தனித்து காவலில் இறங்கும் யோகி பாபு!

கூர்காவாக தனித்து காவலில் இறங்கும் யோகி பாபு!

1034
0
SHARE
Ad

சென்னை: தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் தன்கென்று ஓர் இடம் பதித்து வந்த நடிகர் யோகி பாபு, ‘கூர்கா’ படம் வாயிலாக தனித்து முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் முழுக்க நகைச்சுவையுடன், முதல் முறையாக யோகி பாபுவின் தனித்தன்மையான நடிப்பும் வெளிப்பட உள்ளது எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இத்திரைப்படத்தினை இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கியுள்ளார். யோகி பாபு, கருணாஸ், சார்லி, பிரதீப் ராவத், ஆனந்த்ராஜ், மனோபாலா ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.  இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியாகி இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவரை போன்றெ சந்தானம் தனித்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆயினும், அவருக்காக உருவாக்கப்படும் கதாநாயகன் போன்ற பாத்திரங்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை என்பதே உண்மை.

#TamilSchoolmychoice

ஆயினும், யோகி பாபுவின் இத்திரைப்படத்தை மக்கள் பெரிதும் எதிர்பார்ப்பதாகவும், அவர் தனித்து நடித்தாலும், அவரது நகைச்சுவை பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்துள்ளார் என்ற கருத்துகளும் எழுந்துள்ளன.

இப்படத்தின் முன்னோட்டக் காணொளியில் இடம்பெறும் ஒரு சிலக் காட்சிகள்   தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலை கிண்டல் செய்யும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: