Home One Line P2 ‘காக்டெய்ல்’: முருகன் வேடத்தில் யோகி பாபு, இரசிகர்கள் காட்டம்!

‘காக்டெய்ல்’: முருகன் வேடத்தில் யோகி பாபு, இரசிகர்கள் காட்டம்!

1040
0
SHARE
Ad

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் யோகி பாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் காக்டெய்ல்’.

இத்திரைப்படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் சமூக ஊடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்படத்தில், யோகி பாபு முருகனைப் போன்று வேடமிடப்பட்டு நிற்பதைப் போல் காட்சித் தருகிறார். இது இரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், உடனே அதனை அகற்ற வேண்டும் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice

மற்ற மதக் கடவுள்களை இம்மாதிரியாக இழிவுப்படுத்த தைரியம் இல்லாதவர்கள் தமிழ் திரைப்படக்காரர்கள் என்று இரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இம்மாதிரியான போக்கு யோகி பாபு சம்பாதித்து வைத்திருக்கும் நல்ல பெயரைக் கெடுத்து விடும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் ஆர். . விஜய முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் நடிகை அஞ்சலி மற்றும் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாப்பத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் காக்டெய்ல் பறவை ஒன்றும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

முருகக் கடவுளை அவமதிக்கும்  வகையில் இந்த வெளியீடு உள்ளதாகக் கூறி இத்திரைப்படத்திற்கு எதிராக கருத்துகள் வெளிவரத் தொடங்கி உள்ளன.