Home கலை உலகம் யோகிபாபு, மொட்டை இராஜேந்திரனை புகைப்படம் எடுத்த அஜித்!

யோகிபாபு, மொட்டை இராஜேந்திரனை புகைப்படம் எடுத்த அஜித்!

1041
0
SHARE
Ad

சென்னை : இன்று உச்சத்தில் இருக்கும் நடிகராக இருந்தாலும் கௌரவம் பார்க்காமல், பந்தா காட்டாமல் எளிமையாக நடந்து கொள்பவர் அஜித். தன்னைவிட பிரபல்யத்தில் மிகவும் குறைந்த சின்னச் சின்ன நடிகர்களுக்குக் கூட முக்கியத்துவம் கொடுப்பார்.

அந்த வகையில் ஒருமுறை (2015-ஆம் ஆண்டில்) சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அப்புக்குட்டி என்ற நடிகரை (அழகர்சாமியின் குதிரை படத்தில் கதாநாயகனாக நடித்தவர்) வைத்து, தானே புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டார் அஜித்.

புகைப்படக் கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் அஜித். அதுமட்டுமல்ல! புதிய புதிய நுணுக்கங்களை, கலைகளைக் கற்றுக் கொள்வதிலும் ஆர்வம் காட்டுபவர்.

#TamilSchoolmychoice

அதுபோல, அண்மையில் அவர் துப்பாக்கிச் சுடும் கலையைக் கற்றுக் கொண்டு அது தொடர்பான போட்டிகளிலும் கலந்து கொண்டார். வெற்றி வாகையும் சூடினார்.

மாணவர் குழுக்களோடு இணைந்து, ஆளின்றி பறக்கும் சிறுசிறு விமானங்களை இயக்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் அஜித்.

தற்போது அவர் நடித்து வரும் ‘வலிமை’ படத்தை அவரின் இரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். கொவிட் பாதிப்புகள் காரணமாக படத்தின் படப்பிடிப்புகளும் தாமதமாகி, வெளியீடும் தள்ளிக் கொண்டே போகிறது.

அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது தன்னுடன் நடிக்கும் யோகிபாபு, மொட்டை இராஜேந்திரன் ஆகிய இரு நடிகர்களையும் வைத்து பல புகைப்படங்களை எடுத்திருக்கிறார் அஜித். அவர் அவ்வாறு படம் எடுக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி இரசிகர்களால் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றது.

அந்தப் படத்தைத்தான் மேலே காண்கிறீர்கள்!