Home One Line P2 துப்பாக்கி சுடும் போட்டியில் 6 பதக்கங்கள் வென்ற அஜித், ஓபிஎஸ் வாழ்த்து

துப்பாக்கி சுடும் போட்டியில் 6 பதக்கங்கள் வென்ற அஜித், ஓபிஎஸ் வாழ்த்து

694
0
SHARE
Ad

சென்னை: திரைப்படங்களைத் தவிர பிற சாகசப் போட்டிகளில் கலந்து கொள்வது நடிகர் அஜித் குமாருக்கு வழக்காமான பொழுது போக்குகளாகும். அவ்வகையில், அவர் சமீபமாகத் துப்பாக்கி சுடுதல் போட்டியின் மீது அதிக ஆர்வம் கொண்டு, தமிழ்நாடு அளவில் நடைபெற்ற 46- வது துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்றார்.

அதில் 6 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். நடிகர் அஜித்தின் இரசிகர்களுக்கு இந்த செய்தி பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நடிகர் அஜித்தை டுவிட்டரில் பாராட்டி பதிவொன்றை தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதிவிட்டுளார்.

#TamilSchoolmychoice

“தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அன்புச்சகோதரர் திரு.அஜீத்குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்!,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.