Home One Line P1 பெர்சாத்துவில் இணைய இருப்பதாக வெளிவந்த செய்தியை உப்கோ தலைவர் மறுப்பு

பெர்சாத்துவில் இணைய இருப்பதாக வெளிவந்த செய்தியை உப்கோ தலைவர் மறுப்பு

559
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: தேசிய கூட்டணிக்கு ஆதரவு அளிக்க தயாராக இருக்கும் இரண்டு சபா நாடாளுமன்ற உறுப்பினர்களில் உப்கோ தலைவர் வில்பிரட் மடியஸ் டாங்காவும் ஒருவர் என்ற கூற்றை அவர் மறுத்துள்ளார்.

துவாரான் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் செய்தித் தளத்தின் அறிக்கை பொறுப்பற்றது மற்றும் தவறானது என்றார்.

“இந்த போலி செய்தி எதிர்க்கட்சிகளிடையே உறுதியற்ற தன்மையை உருவாக்கும். சில தரப்புகளால் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டது,” என்று அவர் நேற்று இரவு அறிக்கையின் வாயிலாக பதிலளித்தார்.

#TamilSchoolmychoice

“இது ஓர் அவநம்பிக்கையான முயற்சி. நான் தேசிய கூட்டணியில் சேரப்போகிறேன் என்ற கூற்றை கடுமையாக மறுக்கிறேன். இது நிலைமையை சரி செய்யும் என்று நம்புகிறேன். இவர்கள் பொய்யான, அவதூறான கதைகளை உருவாக்குவதை நிறுத்துமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற வதந்திகள் தொடர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்க நான் தயங்க மாட்டேன்,” என்று அவர் கூறினார்.

வில்பிரட்டும் மற்றொரு சபா நாடாளுமன்ற உறுப்பினரும் பெர்சாத்துவில் சேருவதற்கான முடிவை அறிவிக்க இருப்பதாக முன்னதாகக் கூறப்பட்டது.