Home One Line P1 32 மில்லியன் பிபைசர் தடுப்பூசிகளைப் பெற அரசு முடிவு

32 மில்லியன் பிபைசர் தடுப்பூசிகளைப் பெற அரசு முடிவு

497
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியா மொத்தம் 32 மில்லியன் பிபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியைப் பெற முடிவு செய்துள்ளது. தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் (பிக்) கீழ் கூடுதலாக ஏழு மில்லியன் தடுப்பூசிகள் பெறப்படும்.

இந்த எண்ணிக்கையானது நாட்டின் மக்கள் தொகையில் 50 விழுக்காட்டிற்கு இடமளிக்கும் என்று பிக் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபாவின் பேச்சுவார்த்தைகளின் விளைவாக இந்த விஷயம் கையெழுத்திடப்பட்டு 2021 முழுவதும் அனுப்பப்படும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“அசல் பேச்சுவார்த்தைகளின்படி 20 விழுக்காடு மற்றும் 39 விழுக்காடு (மக்கள் தொகையில்) வழங்கப்படுவதாக இருந்தன. இப்போது மக்கள்தொகையில் 50 விழுக்காடு வரை தடுப்பூசி வழங்குவதற்கான இறுதிப் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வருகிறோம்,” என்று நேற்று திங்களன்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

இதற்கிடையில், மொத்தம் 200,00 கொவிட் -19 சினோவாக் தடுப்பூசிகள் மார்ச் 15 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தேசிய அளவில் பெறப்படும். மேலும், இது முதல் கட்டத்தில் முழுமையாகப் பயன்படுத்தப்படும்.