இந்நிலையில் ஒருநாள், படப்பிடிப்பின் போது அப்புக்குட்டியிடம் அஜித், “ஏன் ஒரே மாதிரியான பாத்திரங்களிலேயே நடிக்கிறீர்கள்?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு “எனக்கெல்லாம் வேற என்ன வேடம் சார் கிடைக்கும்?” என்று தெரிவித்திருக்கிறார் அப்புக்குட்டி.
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எனக்கு நேரம் கிடைக்கும்போது உங்களை வைத்து ஒரு புகைப்படத் தொகுப்பு (photo shoot) பண்ணித் தருகிறேன். அதை இயக்குநர்களிடம் காட்டுங்கள். கண்டிப்பாக நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கும்” என்று சொல்லியிருக்கிறார் அஜித்.
சொன்னதன்படி, ‘தல 59’ படப்பிடிப்புக்கு இடையே, நேரம் கிடைத்தபோது அப்புக்குட்டியை அழைத்திருக்கிறார் அஜித்.
ஒரு புகைப்படத் தளத்தை (photo studio) வாடகைக்கு எடுத்து, அப்புக்குட்டிக்கு விதவிதமான உடைகள் கொடுத்து, புகைப்படங்கள் எடுத்து, ஓர் அழகான புகைப்படத் தொகுப்பு செய்து கொடுத்திருக்கிறார்.
அப்புக்குட்டிக்குத் தாளாத மகிழ்ச்சி.
இச்சம்பவத்தால், அப்புக்குட்டியை வைத்து அஜித் குறும்படம் ஒன்று இயக்குவதாகச் செய்தி பரவியது.
இச்செய்திக்கு அஜித் தரப்பிலிருந்து மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “அப்புக்குட்டியை வைத்து அஜித் குறும்படம் இயக்கவில்லை; புகைப்படங்கள் மட்டுமே எடுத்தார்” என்று அஜித் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.