Home இந்தியா சென்னையில் மெட்ரோ தொடர்வண்டிப் போக்குவரத்து: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.  

சென்னையில் மெட்ரோ தொடர்வண்டிப் போக்குவரத்து: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.  

850
0
SHARE
Ad

medசென்னை,ஜூன் 30- சென்னை மாநகரின் புதிய அடையாளமான மெட்ரோ தொடர்வண்டிச் சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பயணம் மேற்கொண்டனர்.

சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மெட்ரோ தொடர்வண்டிப் போக்குவரத்துத் திட்டம் இரண்டு வழித்தடங்களில் நிறைவேற்றப்படுகிறது.

முதல் வழித்தடம் வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரையில் 23.085 கி.மீ. தூரம் செல்கிறது. இரண்டாவது வழித்தடம் சென்னை சென்டிரலில் இருந்து புனித தோமையார் மலை வரையிலும் 21.961 கி.மீ. தூரம் செல்கிறது.

#TamilSchoolmychoice

முதல் கட்டமாகக் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான 10.15 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ தொடர்வண்டிப்  போக்குவரத்துத் தொடங்கியது.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று நண்பகல் 12.10 மணிக்கு கொடி அசைத்து மெட்ரோ தொடர்வண்டிச் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, முதல் மெட்ரோ தொடர்வண்டி ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. மறுமார்க்கத்தில் கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூரை நோக்கி மற்றொரு தொடர்வண்டி புறப்பட்டது. அந்தத் தொடர்வண்டிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

முதல் நாளில் மெட்ரோ தொடர்வண்டியில் பயணிகள் மிகவும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் பயணம் செய்தனர். வளைந்து நெளிந்து செல்லும் உயர்மட்டப் பாதையில் குளு குளு வசதியுடன் கூடிய மெட்ரோ தொடர்வண்டியில் நகரின் அழகை இரசித்தபடி பயணம் செய்தது புதிய அனுபவமாக இருந்ததாகப் பயணிகள் தெரிவித்தனர்.