Home இந்தியா சென்னையில் மெட்ரோ தொடர்வண்டியை இயக்கிய பெண் ஓட்டுநர்கள் பெருமிதம்!  

சென்னையில் மெட்ரோ தொடர்வண்டியை இயக்கிய பெண் ஓட்டுநர்கள் பெருமிதம்!  

597
0
SHARE
Ad

medroசென்னை, ஜூன் 30- ஆலந்தூரில் இருந்து முதல் மெட்ரோ தொடர்வண்டியைச் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பிரீத்தி என்ற பெண் ஓட்டுநர் கோயம்பேடு நோக்கி ஓட்டிச்சென்றார்.

எதிர்முனையில் கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் நோக்கி ஜெயஸ்ரீ என்ற பெண் ஓட்டுநர் மற்றொரு மெட்ரோ தொடர்வண்டியை ஓட்டிச்சென்றார்.

இவர்களைத் தொடர்ந்து இரண்டு மார்க்கங்களிலும் மூர்த்தி, எல்டன் எஸ்.பால், முகமது உசேன் ஆகிய ஓட்டுநர்கள் தனித்தனியாக மெட்ரோ தொடர்வண்டியை ஓட்டிச் சென்றனர்.

#TamilSchoolmychoice

மெட்ரோ தொடர்வண்டியை ஓட்டும் பெண் ஓட்டுநர்கள் பிரீத்தி, ஜெயஸ்ரீ ஆகியோர் கூறியதாவது:–

“மெட்ரோ தொடர்வண்டியை ஓட்டும் சவாலான பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளோம். எங்களுடைய பெற்றோரும், குடும்பத்தினரும் அளிக்கும் ஊக்கத்தால் தான் நாங்கள் மெட்ரோ தொடர்வண்டியை ஓட்டும் அளவுக்குச் சாதிக்க முடிகிறது.

எங்களைப் போன்று வளரும் இளைய தலைமுறைப் பெண்கள் ஒவ்வொருவரும் சவாலான துறையில் ஈடுபட்டுப் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக மாற வேண்டும்.

‘டிப்ளமோ’ படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்த எங்களுக்கு இதுபோன்ற ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதைப் பெருமையாக நினைக்கிறோம். சென்னை போன்ற மாநகரங்களில் பாதுகாப்பும் நன்றாகவே இருக்கிறது.

இதனைப் பயன்படுத்தி ஒரு சில குடும்பங்களில் முடங்கிக் கிடக்கும் பெண்களும் வீட்டிலிருந்து வெளியே வந்து சமுதாயத்துக்கு ஏதாவது ஒரு வகையில் பயனளிக்கும் வகையிலும், வருமானம் ஈட்டும் வகையிலும் செயல்பட்டால் விரைவில் நம் நாடு வல்லரசாகும்.

பெண்கள் நினைத்தால் வெற்றி பெறுவது நிச்சயம் என்பதில் சந்தேகமே இல்லை. தாய் மண்ணில் மெட்ரோ தொடர்வண்டியை ஓட்டுவதில் பெருமிதம் கொள்கிறோம்”.

இவ்வாறு அவர்கள் கூறினர்.