Home கலை உலகம் “தெலுங்குக்காரர்கள் ஆணாதிக்கம் பிடித்தவர்கள்; பெண்களை மதிக்கத் தெரியாதவர்கள்”- ராதிகா ஆப்தே!

“தெலுங்குக்காரர்கள் ஆணாதிக்கம் பிடித்தவர்கள்; பெண்களை மதிக்கத் தெரியாதவர்கள்”- ராதிகா ஆப்தே!

605
0
SHARE
Ad

radhikaசென்னை, ஜூன் 30- தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகு ராஜா முதலிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே.

தமிழ் தவிர தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவரது ஆபாசப் படங்களும், ஆபாசக் காணொளியும்  இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் பரவிப் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

முன்பு சில தெலுங்குப் படங்களில் நடித்த ராதிகா ஆப்தே, தற்போது  தெலுங்குப் படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வருகிறார்.

#TamilSchoolmychoice

தெலுங்குப் பட வாய்ப்பைத் தவிர்ப்பது குறித்து ராதிகா ஆப்தே, “தெலுங்குப் பட உலகில் சில பட அதிபர்களும், இயக்குநர்களும் நல்லவர்களாக இல்லை. அந்தப் பட உலகம் ஆணாதிக்கம் நிறைந்ததாக உள்ளது. கதாநாயகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் போன்றோரிடம் ஆணாதிக்கச் சிந்தனைகளைத் தான் அதிகமாகக் காண முடிகிறது. அவர்கள் பெண்களை மதிப்பதே இல்லை” என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

எதையும் மூடி மறைக்கத் தெரியாத ராதிகா ஆப்தே, தன் மனதில் உள்ளதையும் மூடி மறைக்காமல் இவ்வாறு பேசியுள்ளது தெலுங்குத் திரையுலகினரை அதிருப்திக்குள்ளாக்கி உள்ளது.