Home இந்தியா ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஜனநாயகம் தோற்றுவிட்டது: சி.மகேந்திரன் வேதனை!

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஜனநாயகம் தோற்றுவிட்டது: சி.மகேந்திரன் வேதனை!

662
0
SHARE
Ad

mahendran-350சென்னை, ஜூன் 30-ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜனநாயகம் தோற்றுவிட்டது எனக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன் வேதனையுடன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“இன்று அ.தி.மு.க. வெற்றி பெற்று விட்டதாக அக்கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடலாம். ஆனால், இந்த வெற்றிக்குப் பின்னால் ஜனநாயகம் சீரழிந்து விட்டது என்பதை அவர்கள் உணரவில்லை.

#TamilSchoolmychoice

ஆர்.கே.நகர் தேர்தல் மூலம் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு அவ நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க.வின் அனைத்து அமைச்சர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இலவசங்கள் மற்றும் சலுகைகளை மட்டுமே முன்வைத்துப் பிரசாரம் செய்தனர்.

மேலும், மிகப்பெரிய அளவில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றிய தேர்தல் இது.

ஆனால், நாங்கள் வெற்றியை எதிர்பார்த்து இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. ஜனநாயகத்தை நிலைநாட்டவே போட்டியிட்டோம். அதைச் செய்தும் இருக்கிறோம். தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுப்போம்” எனக் கூறியுள்ளார்.