Home One Line P2 தல60: ‘வலிமை’ என படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது!

தல60: ‘வலிமை’ என படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது!

1062
0
SHARE
Ad

சென்னை: சமீபத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து வெளிவந்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் இரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. இப்படத்தினை இயக்குனர் எச்.வினோத் இயக்கியிருந்தார்.

தற்போது, நடிகர் அஜித்தின் 60-வது படத்தையும் இயக்குனர் எச்.வினோத் இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் இப்படத்தையும் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு படக்குழுவினர்வலிமைஎன்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் பூசை போடப்பட்ட புகைப்படமொன்று இணையதளங்களில் பரவலாகி வருகிறது.

#TamilSchoolmychoice

நேர்கொண்ட பார்வை படத்திற்கு இசை அமைத்த யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கும் இசை அமைக்கிறார்.