டாக்கா: நபிகள் நாயகத்தை முகநூலில் அவமதித்ததாகக் கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான பங்களாதேச முஸ்லிம்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை சாலையில் போராட்டத்தில் இறங்கினர். காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அவானி செய்தி வெளியிட்டுள்ளது.
ஓர் இந்து இளைஞரால் இந்த அறிக்கை பதிவேற்றப்பட்டதன் காரணத்தால், போலா மாவட்டத்தில் உள்ள போர்ஹானுடின் நகரில் பதட்டம் ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் 20,000 முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்து, அந்த நபருக்கு மரண தண்டனையைக் கோரினர்.
மத பதற்றத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அச்சந்தேகநபர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், எதிர்ப்பாளர்கள் அதிகாரிகள் மீது கற்களை வீசத் தொடங்கியபோது, அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் சுட நேரிட்டதாக காவல் துறை தெரிவித்தது.
காயமடைந்த 43 பேரில் ஏழு பேர் ஆபத்தான நிலையில் இருப்பதால் இறப்பின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று போலா மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களில் 14 வயது மதரஸா மாணவரரும் அடங்குவார் என்று சாட்சிகள் தெரிவித்துள்ளன.