Home Featured உலகம் டாக்கா பயங்கரவாதத் தாக்குதல் முடிவுக்கு வந்தது!

டாக்கா பயங்கரவாதத் தாக்குதல் முடிவுக்கு வந்தது!

833
0
SHARE
Ad

Dhaka-restaurant attackடாக்கா – வங்காளதேசத்தின் உள்நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு டாக்காவில் உள்ள ஓர் உயர்தர உணவகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் – அதைத் தொடர்ந்த பிணை பிடிப்பு சம்பவங்கள் – ஆகியவை ஒருமுடிவுக்கு வந்துள்ளன.

  • இந்த உணவகம் ஸ்பெயின் நாட்டு உணவு வகைகளுக்கான உணவகமாகும்.
  • பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
  • ஒரு பயங்கரவாதி உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளான். மேலும் இருவர் இன்னும் அங்கே இருக்கிறார்களா அல்லது அடையாளம் காணப்பட்டுள்ளார்களா என்பது தெரியவில்லை.
  • பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்கள் எனக் கருதப்படும் 13 பேர் பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டுள்ளனர்.
  • சுமார் 10 மணி நேரம் நீடித்த இந்த தாக்குதல் – பாதுகாப்புப் படையினரின் இடைவிடாத பதிலடியால் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
  • இரண்டு பெரிய அளவிலான வெடிகுண்டு சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.Dhaka resturant-attack

காயமடைந்த ஒருவர் அவசர சிகிச்சை வாகனத்தின் (ஆம்புலன்ஸ்) மூலம் கொண்டு செல்லப்படுகின்றார்

  • உணவகத்தின் உள்ளே ஐந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • இதுவரை 36 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
  • பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு கையெறி குண்டுகளைப் பயன்படுத்தினர்.
  • ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
  • இரண்டு இத்தாலிய நாட்டவர்கள் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர்.
  • மூன்று பாதுகாப்புப் படையினர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
  • உணவகத்தின் உட்பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையை நடத்தி, உணவகத்தில் பயங்கரவாதிகள் வேறு யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.