Home வணிகம்/தொழில் நுட்பம் இந்தியா: கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் டிக் டாக் செயலி இடம்பெறவில்லை!

இந்தியா: கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் டிக் டாக் செயலி இடம்பெறவில்லை!

1092
0
SHARE
Ad

புது டில்லி: டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்பட்ட போதும் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் டிக் டாக் செயலி பதிவிறக்குவதற்கு கிடைக்கவில்லை என மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடைவிதித்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் டிக் டாக் காணொளிகளின் பகிர்வை தடை செய்ததோடு மட்டுமல்லாமல், அதன் பயன்பாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டது

டிக் டாக் செயலி சீன நாட்டு நிறுவனமான பைட்டான்ஸ்க்கு உரியதாகும். இந்தியாவில் மாதம் 120 மில்லியன் பயன்பாட்டாளர்கள் இதை பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் டிக் டாக் செயலியை பதிவிறக்கத் தேடியும் கிடைக்கவில்லை என மக்கள் கூறியுள்ளனர். 

இதற்கிடையே, அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும் வரை டிக் டாக் மீது இருக்கும் தடையை நீக்க முடியாது என்று கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது