Home நாடு சண்டாக்கானில் ஐந்து முனை போட்டி!

சண்டாக்கானில் ஐந்து முனை போட்டி!

872
0
SHARE
Ad

சண்டாக்கான்: வருகிற மே 11-ஆம் தேதி நடைபெற இருக்கும் சண்டாக்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் தியோங் ஹுவா இடைநிலைப் பள்ளியில் இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் தொடங்கியது.

நம்பிக்கைக் கூட்டணி சார்பாக ஜசெக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மகளான விவியன் வோங் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். ஐக்கிய சபா கட்சியைப் பிரதிநிதித்து முன்னாள் பத்து சாபி நாடாளுமன்ற உறுப்பினரான லிண்டா சென் தமது வேட்பு மனுவைத் சமர்ப்பித்தார்.

இம்முறை மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களம் இறங்கி உள்ளனர்.  முன்னாள் அமானா கட்சியின் உறுப்பினரான ஹம்சா அப்துல்லா, சியா சியூ யோங் மற்றும் சுலாய்மான் அப்துல் சாமாட் ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

#TamilSchoolmychoice

கடந்த மார்ச் 28-ஆம் தேதி சண்டாக்கான் நாடாளுமன்ற உறுப்பினர், ஸ்டீபன் வோங் மாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்து சண்டாக்கானில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இரண்டு சட்டமன்றங்களைக் கொண்டுள்ள சண்டாக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் சுமார் 40,131 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 270 வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களிக்க உள்ளனர்.

கடந்த 14-வது பொதுத் தேர்தலில், 10,098 பெரும்பான்மை வாக்குகளுடன் ஜசெக கட்சி வேட்பாளரான ஸ்டீபன் வோங் தேசிய முன்னணி வேட்பாளரான டத்தோ லிம் மிங் ஹூவை தோற்கடித்தார்.