Home இந்தியா இந்தியா தேர்தல்: 9 மாநிலங்களில் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு!

இந்தியா தேர்தல்: 9 மாநிலங்களில் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு!

698
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலின் ஒன்பது மாநிலங்களுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று திங்கட்கிழமை உள்நாட்டு நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கியது.  

இந்திய நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் வேளையில், தற்போது வரை மூன்று கட்டங்களில் 302 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 71 தொகுதிகளை உள்ளடக்கிய நான்காம் கட்ட வாக்குப்பதிவு  இன்று தொடங்கியுள்ளது.

இந்த தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 17 தொகுதிகள், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மாநிலங்களில் தலா 13 தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 8 தொகுதிகள், மத்திய பிரதேசம், ஒடிசாவில் தலா 6 தொகுதிகள், பிகாரில் 5 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 71 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது