இணையம் வழி திரைப்படங்களைக் காணும் சேவைகளை கட்டணத்திற்கு வழங்கும் நெட்பிலிக்ஸ் இந்தத் துறையில் உலகின் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதவாக்கில் வட தாய்லாந்தின் சியாங் மாய் நகருக்கு அருகே குகை ஒன்றில் சிக்கிக் கொண்ட 12 சிறுவர்களும் அவர்களின் பயிற்றுநரும் எவ்வாறு சாகசமாக மீட்கப்பட்டனர் என்பதைக் கூறும் இந்தத் திரைப்படத்தை “கிரேசி ரிச் ஆசியன்ஸ்” திரைப்படத்தை இயக்கிய ஜோன் எம்.சூ இயக்கவிருக்கிறார். தாய்லாந்தின் பூன்பிரியாவும் இணைந்து இந்தப் படத்தை இயக்குவார்.
தும்லுவாங் என்ற பெயர் கொண்ட தாய்லாந்து குகையில் சிக்கிக் கொண்டு மீட்கப்பட்ட 12 சிறுவர்களும், அவர்களின் பயிற்றுநரும் இணைந்து 13தும்லுவாங் என்ற நிறுவனத்தைத் தோற்றுவித்துள்ளனர். இந்த நிறுவனம்தான் அவர்களின் கதையை படமாக்கும் உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
எனினும் இவர்களின் கதை முழு திரைப்படமாக எடுக்கப்படுமா அல்லது தொடராக எடுக்கப்படுமா என்பது போன்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இவர்களுக்கிடையிலான உடன்படிக்கை தற்போது கையெழுத்திடப்பட்டுள்ளது.