“உற்பத்தித் திறத்திலும் சேவைத் தரத்திலும் நேர்மையுடன் ஊழலற்றத் தன்மை நிறைந்திருக்கும் பட்சத்தில் தரமான உற்பத்தித் திறன் பல்கிப் பெருக வாய்ப்புண்டு. இது போன்ற சூழலில் பயனீட்டாளர்கள் நயமான பொருள்களையும் சேவையையும் நுகர வாய்ப்புண்டு. இந்த நுகர்ச்சியே பயனீட்டாளர் தங்களின் அன்றாட வாழ்வுதனில் அடைய வேண்டும். இதனை உறுதி செய்யும் பொருட்டு முதலாளிகள் தங்களின் ஊழியர்கள் முறையான பயிற்சி பெற்றுத் திகழ்வதை உறுதி செய்ய வேண்டும். அதன் பொருட்டு முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களை மனிதவள அமைச்சின் ‘நியோஸ்’ போன்ற துணை நிறுவனங்களின் பாதுகாப்பு சுகாதார பயிற்சிகளுக்கு அனுப்பி அவர்களின் நலனில் கவனம் செலுத்த வேண்டும். அவர்களின் பாதுகாப்பில் பிரத்தியேக கவனம் எடுத்துக் கொள்வது அவசியம்” எனவும் குணசேகரன் தனது செய்தியில் அறிவுறுத்தினார்.
“அவர்களின் வேலை இடங்கள் அலட்சியமில்லாமல் பாதுகாப்புடன் இருப்பது மிகவும் அவசியம். அப்போதுதான் இருசாராரும் வெற்றியின் தளத்தில் பயணம் செய்ய முடியும். சேவையும் பொருளும் உற்பத்தியின் உன்னதத்தை அடைந்து எண்ணிக்கையில் உயர்வடைய முடியும். இறுதியாக, தொழிலாளர் சமூகத்தின் உன்னதத்தை இந்த மே தினத்தில் நெஞ்சில் நிறுத்தி நாட்டின் மேன்மையையும் உழைப்போரின் சிறப்பையும் போற்றுவோம்” என்றும் குணசேகரன் கந்தசாமி தனது தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.