Home வணிகம்/தொழில் நுட்பம் லாஃபார்ஜ் சிமெண்ட் நிறுவனத்தை ஒய்டிஎல் முழுமையாகக் கையகப்படுத்துகிறது

லாஃபார்ஜ் சிமெண்ட் நிறுவனத்தை ஒய்டிஎல் முழுமையாகக் கையகப்படுத்துகிறது

676
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாட்டின் சிமெண்ட் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும்  லாஃபார்ஜ் சிமெண்ட் நிறுவனத்தை, அந்நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை ஏற்கனவே கொண்டிருக்கும் ஒய்டிஎல் நிறுவனம் முழுமையாக எடுத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது.

தற்போது லாஃபார்ஜ் சிமெண்ட் நிறுவனத்தில் 51 விழுக்காட்டைக் கொண்டிருக்கும் ஒய்டிஎல், எஞ்சிய பங்குகளையும் வாங்கிக் கொள்ள முன் அறிவிப்பு கொடுத்திருக்கிறது.

நாட்டிலுள்ள சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களில் மிகப் பெரிய நிறுவனமாகும்.

#TamilSchoolmychoice

ஒரு பங்குக்கு 3.75 ரிங்கிட் விலை கொடுத்து வாங்கிக் கொள்ள ஒய்டிஎல் முன்வந்திருக்கின்றது. இந்த விலையின் அடிப்படையில் லாஃபார்ஜ் நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 3.2 பில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இஆர்எல் எனப்படும் கோலாலம்பூர் விமான நிலையத்திற்கான இரயில் சேவை முதல் பல கட்டுமானங்களை மேற்கொண்டு வந்திருக்கும் ஒய்டிஎல் நிறுவனம் லாஃபார்ஜ் நிறுவனப் பங்குகளை வாங்கிக் கொள்ள 1.625 பில்லியன் தொகையை செலவிடும்.

இன்றைய அறிவிப்புகளைத் தொடர்ந்து கோலாலம்பூர் பங்குச் சந்தையில் லாஃபார்ஜ் சிமெண்ட் நிறுவனத்தின் பங்குகளும் விலை உயர்ந்து 3.72 ரிங்கிட் விலையில் பரிமாற்றம் கண்டன.

இதன்மூலம் மலேசியாவில் சிமெண்ட் உற்பத்தித் தொழிலை மேலும் விரிவாக்கும் முயற்சிகளில் தங்களின் நிறுவனம் ஈடுபடும் என ஒய்டிஎல் நிறுவனம் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தது.