Home வணிகம்/தொழில் நுட்பம் கோடீஸ்வரர் இயோ தியோங் லேய் காலமானார்

கோடீஸ்வரர் இயோ தியோங் லேய் காலமானார்

1015
0
SHARE
Ad
Yeo Tiong Lay-Tan Sri-decd
டான்ஸ்ரீ இயோ தியோங் லேய்

கோலாலம்பூர் – ஒய்டிஎல் குழுமத்தின் தோற்றுநரான டான்ஸ்ரீ இயோ தியோங் லேய் நேற்று காலமானார். அவருக்கு வயது 87.

மலேசியாவின் சீனக் கோடீஸ்வரர்களில் குறிப்பிடத்தக்கவர் டான்ஸ்ரீ இயோ தியோங் லேய் (Tan Sri Yeoh Tiong Lay). தனது பெயரின் முதல் எழுத்துகளைக் கொண்டு ஒய்டிஎல் என்ற பெயரில் ஒரு சிறிய கட்டுமானக் குத்தகையாளரா, 1955-இல் வணிகத்தைத் தொடங்கி நாளடைவில், நில சொத்துகள், கட்டடங்கள், வணிக வளாகங்கள், உயர்தர தங்கும் விடுதிகள், தொழில் ஆலைகள் என பல முனைகளிலும் தனது தொழில்களை விரிவுபடுத்தி, தனது ஒய்டிஎல் (YTL) நிறுவனத்தை நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உருமாற்றிக் காட்டியவர் இயோ தியோங் லேய்.

தனது வணிகக் குழுமத்தை பிரிட்டன் வரை விரிவாக்கியவர். கடந்த சில ஆண்டுகளாக தனது நிறுவனங்களின் வணிகப் பொறுப்புகளை தனது மகன்களின் வசம் ஒப்படைத்து விட்டாலும், ஒய்டிஎல் குழுமத்தின் முக்கிய முடிவுகள் அவரது ஆலோசனைப்படித்தான் எடுக்கப்பட்டு வந்தன. தற்போது அவரது நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை அவரது மகன் டான்ஸ்ரீ பிரான்சிஸ் இயோ வகித்து வருகிறார்.

#TamilSchoolmychoice

போர்ப்ஸ் (Forbes) ஊடகத்தின் மதிப்பீட்டின்படி இயோ தியோங் லேய் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் (8.2 பில்லியன் ரிங்கிட்) சொத்துகளைக் கொண்டு மலேசிய நாட்டின் ஏழாவது பெரிய பணக்காரராகத் திகழ்கிறார்.