Home நாடு ரோஹின்யா அகதிகளுக்காக மருத்துவக் குழுவை அனுப்புகிறது மலேசியா!

ரோஹின்யா அகதிகளுக்காக மருத்துவக் குழுவை அனுப்புகிறது மலேசியா!

737
0
SHARE
Ad

subra-launching-new-ambulanceகோலாலம்பூர் – வங்காள தேசத்தில் தவித்து வரும் ரோஹின்யா அகதிகளுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையளிக்க மலேசியா, 50 முதல் 60 பேர் கொண்ட குழு ஒன்றை அனுப்புவதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை பத்துமலையில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய டாக்டர் சுப்ரா,  பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற அக்குழு தயார் நிலையில் இருப்பதாகவும், விரைவில் வங்காள தேசம் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

“அவர்கள் எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். நீண்ட காலம் தேவைப்படுமானால் சுழற்சி முறையில் அடுத்த குழுவை அனுப்புவோம்” என்று டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice